ஆசிய நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளி மாணவர் தேர்வு

ஆசிய நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளி மாணவர் தேர்வு
Updated on
1 min read

ஆசிய நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவிலான 44-வது ஜூனியர் நீச்சல் போட்டி ஜூலை 4 முதல் 6-ம் தேதி வரை புனேயில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 51 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு 22 பதக்கங்களை பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்தது.

இதில் மதுரை லீ சாட்லியர் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் பி.விகாஸ் 50 மீ. பிரீஸ்டைல் பிரிவில் 24.76 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். அதேபோல 100 மீ. பிரீஸ்டைல் பிரிவில் 55.38 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். 50 மீ. பிரிவில் மகாராஷ்ட்ரா வீரர் வீர்ராஜ்பிரபு 25.39 வினாடிகளில் கடந்ததும், 100 மீ. பிரீஸ்டைல் பிரிவில் கர்நாடகா வீரர் சஞ்சய் 55.47 வினாடிகளில் கடந்ததும் முந்தைய சாதனையாக இருந்தது.

50 மீ. பட்டர்பிளை பிரிவில் வெள்ளிப் பதக்கம், 400 மீ. பிரீஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்றார்.

இதன் மூலம் செப்டம்பர் மாதம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற உள்ள 9-வது ஆசிய போட்டிக்கு மாணவர் விகாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டினர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட செயலாளர் என்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in