கோவை பர்னிச்சர் நிறுவன மோசடி வழக்கு: இடைத்தரகர் சுகேஷுக்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

கோவை பர்னிச்சர் நிறுவன மோசடி வழக்கு: இடைத்தரகர் சுகேஷுக்கு குற்றப்பத்திரிகை வழங்கல்
Updated on
1 min read

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய சுகேஷ், மற்றொரு மோசடி வழக்குக்காக கோவை நீதி மன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட் டார். அந்த வழக்கின் குற்றப்பத் திரிகை நகல் அவருக்கும், அவரது தந்தைக்கும் வழங்கப்பட்டது.

கோவை கணபதி சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் ராஜவேலு. பர்னிச்சர் கடை வைத்துள்ள இவ ரிடம், 2010-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.43 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இடைத்தரகர் சுகேஷ், அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் மீது ராஜவேலு, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதனிடையே இரட்டைஇலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸாரால் சுகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி வழக்கில் ஆஜராகாத தால் அவருக்கு கோவை நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்பேரில், ஜூன் 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவர் வழக்கு விசாரணைக் காக திஹார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார். இந்நிலை யில், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது தந்தையும் ஆஜரானார். 60 பக்கங் கள் கொண்ட வழக்கின் குற்றப் பத்திரிகை நகல் இருவருக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை ஜூலை 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதையடுத்து, சுகேஷை டெல்லி போலீஸார் ரயில் மூலமாக அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in