

பழனி முருகன் கோயில் நிதியில் வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என திமுக கொறடா அர.சக்கரபாணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நேர மில்லா நேரத்தில் இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், ‘‘பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயி லுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத் தில் வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பழனி அருள் மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூ. 400 கோடி வருமானம் வருகிறது. எனவே, இடமும், நிதியும் இருப்பதால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அதுபோல ஒட்டன்சத்திரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்’’ என்றார்.
அவருக்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘‘பழனி கோயில் நிதியில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்’’ என்றார்.