

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங் களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்து 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், எழுத்துத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட் டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் 5:1 என்ற விகிதத்தில் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படு வார்கள்.
அடுத்த கட்ட உடல் கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற உள்ளன.