

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள கரந்தா நேரி வடக்கு தெருவை சேர்ந்த நாராயணன் மகன் வேல்சாமி (30). கட்டிடத் தொழிலாளியான இவரும், தெற்கு கரந்தாநேரியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (29) என்பவரும் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாங்குநேரி அருகே பானாங் குளம் ரயில்வே கேட் அருகில் மறைந்திருந்த கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து வேல் சாமியை அரிவாளால் வெட்டியது. அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ் தப்பியோடினார். பலத்த காயமடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் வடக்குநெடுங்குளத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கணேசன் (33) என்பவரும் வேலைமுடிந்து அவ்வழியாக பைக்கில் வந்தார். அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. அவரைத் தொடர்ந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்த கரந்தாநேரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிக்கனி (37) என்பவரையும் அந்த கும்பல் தலை துண்டித்து கொலை செய்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், நாங்குநேரி டி.எஸ்.பி. சண்முகம் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்தது. பலத்த காயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பானாங்குளம் மற்றும் கரந்தாநேரியை சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் காரணமாக இந்த கொலைகள் நடைபெற்றதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். கடந்த 21.9.14-ம் தேதி பானான்குளத்தை சேர்ந்த 2 பேர் கரந்தாநேரிக்கு டிவி பழுது நீக்க சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதை கரந்தாநேரியை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. இது குறித்து நாங்குநேரி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இது தொடர்பான முன்விரோதத் தில் தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று போலீஸார் நடத்திய விசார ணையில் தெரியவந்துள்ளது.
தற்போது கரந்தாநேரி, பானாங்குளம் பகுதியில் போலீ ஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். இரட்டை கொலைகள் தொடர்பாக பானாங்குளத்தை சேர்ந்த வானமாமலை, சொக்கநாதன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பொதுமக்கள் மறியல்
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கரந்தாநேரி பகுதி மக்கள், திருநெல்வேலி - கன்னியா குமரி நான்குவழிச் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
`இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இறந்தவர்கள் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கரந்தாநேரியில் தனி யாக ரேஷன் கடை அமைக்க வேண்டும்’ என்று மறியலில் ஈடு பட்டவர்கள் கோரிக்கை வைத்த னர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்ததை அடுத்து அரைமணிநேரம் நீடித்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.