

தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பெரிய வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இவற்றில் 6 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ-வும் 19 கட்டிடங்களுக்கு மாநகராட்சியும் சீல் வைத்தன. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிடங் களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் சீல் அகற்றப் பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் அண்மையில் தீ விபத்தில் சிக்கிய தால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனையடுத்து விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கள் பல தரப்பில் இருந்து எழுந்தன.
அதேவேளையில் நீதிபதி ராஜேஸ்வரன் கமிட்டியின் பரிந் துரையின் அடிப்படையில் 2007-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன் முறைப்படுத்தலாம் என்ற 113 சி பிரிவை நடைமுறைப்படுத்தி அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால் வரன்முறைப்படுத்துவ தற்கான இணையதளம் உருவாக்கு வதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில் 2007-க்கு பின்னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2007-ம் ஆண்டுக்கு பின்னர் விதிமீறல் கட்டிடங்கள் குறைந்துள்ளன. ஆனாலும் சிலர் சிறு சிறு விதி மீறல்களுடன் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி யுள்ளது.
அதனால் தி.நகர் பகுதியில் ஆய்வு செய்து, விதிமீறல் கட்டிடங் களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்னும் சில நாட்களில் தி.நக ரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை தொடங்கும். 113 சி பிரிவை நடைமுறைப்படுத்துவதை பொறுத்தவரையில், அதற்கான இணையதளம் தயார் ஆன பின்னர் பணிகள் தொடங்கும் என்றார்.