

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு ஒரு பிரச்சினையை எழுப்பி பேசும்போது, ‘‘சென்னையில் தன்னாட்சி நிறுவனமாக செயல் பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல் கலைக்கழகத்தின்கீழ் ஒரு துறை யாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது தமிழர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
அவருக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பெரும் பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத் துக்காட்டும் வகையில் முது பெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவ னத்தின் மூலம் உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறைசாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க முயற்சி நடப்பதாக உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கோ, தமிழக அரசுக்கோ மத்திய அரசிடம் இருந்து இதுபற்றி எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி பழனிசாமி கூறி னார்.