

பள்ளி மாணவ-மாணவியர் மத்தி யில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் புத்தகத் திருவிழா வரும் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதா னத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலை யில், பள்ளி மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக் கும் வகையில் ஒய்எம்சிஏ மைதா னத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப் பட்டது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த சுமார் 1500 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நூல்களை வாசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர் டிம் மூரே கலந்து கொண்டு படிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
நெருக்கடி மிகுந்த பள்ளி நேரத் திலும் புத்தகங்களைப் படிப்ப தற்கு மாணவர்கள் முன்னுரிமை தந்து, அதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் பலதரப் பட்ட நூல்களைப் படிப்பதால் அறிவு வளர்வதுடன், வாழ் வில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும். வாழ்க்கையில் முக்கியமான அங்கம் புத்தகங் கள்தான். அவற்றின் மூலமாக மட் டுமே கடந்த காலத்தை அறிந்து கொள்ள முடியும். மேலும் எதிர் காலத்தையும் கணிக்க முடியும்.
இவ்வாறு டிம் மூரே பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் படிப் பதற்காக புத்தகங்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சி முடிந்ததும், அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கே வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘ஒரே இடத்தில் அமர்ந்து நண்பர்களுடன் படிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பல வண்ண படங்கள் அடங்கிய புத்த கங்களைக் கொடுத்தனர். நிகழ்ச்சி யில் மட்டுமல்லாமல், தொடர்ந்து புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்’’ என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ்.சண்முகம், அ. குமரேசன், சொக்கலிங்கம், வெங்கட், க. நாக ராஜன், ஸ்கலாஸ்டிக் பதிப்பக முதுநிலை மேலாளர் பிப்லாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.