

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மையை உரு வாக்கும் தமிழ்நாடு ரியல் எஸ் டேட் ஒழுங்குமுறை ஆணையத் துக்கான தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் முகவரி (www.tnrera.in). தற்போது இணையதள உருவாக்கம் முடிந் துள்ள நிலையில், அதன் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கட்டு மான நிறுவனங்கள் தங்களது பணிகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய சட்டத் தின்படி, அனைத்துப் பணிகளும் இணையதளத்தில் பதிவு செய்யப் படவேண்டியது கட்டாயம். இவ் வாறு பதிவேற்றம் செய்யப் படும் பணிகள் குறித்து வாடிக்கை யாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: இணையதளம் தயாரிக்கும் பணி முடிந்துள்ளதால், அதன் முக வரியை வெளியிட்டுள்ளோம். தற்போது கட்டுமான நிறுவனத் தினர் தங்களது திட்டங்களின் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். ரெரா ஆணைய அலு வலகம் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக தலைவராக வீட்டு வசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.