தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 குறைவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 குறைவு
Updated on
1 min read

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.128 குறைந்து ரூ.21 ஆயிரத்து 504-க்கு விற்பனை செய்யப் பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.21 ஆயிரத்து 504-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 688-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in