

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் அரசு வழக்கறிஞர்களை நிய மனம் செய்து தமிழக அரசு பிறப் பித்த அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை 10-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர், புதுக்கோட்டை, தூத்துக் குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக, அரசு ஜூன் 9-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நியமனங்களை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 5 மாவட் டங்களிலும் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு தடை விதித்தனர். மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்தை எதிர்த்தும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் 5 மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர் பான வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வாதிடும்போது, ‘விதிப்படியே நியமனங்கள் நடைபெற்றுள்ளன’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய’ உத்தரவிட்டனர்.
பின்னர், 5 மாவட்டங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.