Published : 03 Nov 2014 09:56 AM
Last Updated : 03 Nov 2014 09:56 AM

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்: சென்னையில் 890 மையங்களில் நடந்தது

சென்னையில் இரண்டாம் கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 890 மையங்களில் நடைபெற்ற இந்த முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம்கள் நடை பெற்றன. ஏற்கெனவே அக்டோபர் 26-ம் தேதி இதே போன்ற சிறப்பு முகாம் நடைபெற்றதால், இந்த முறை முகாமில் வெகு சிலரே கலந்து கொண்டனர்.

எனினும் 18வயது பூர்த்தி யடையும் புதிய வாக்காளர் கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெயர் சேர்க்க ஆர்வமாக இருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் அட்டை பெறாதவர்களுக்கு இந்த முகாமில் அட்டை வழங்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் அட்டை வழங்கப்படாததால், பொது மக்கள் குழப்பம் அடைந்தனர்.

சிறப்பு முகாம்கள் இத்துடன் முடிவுற்ற நிலையில், பூர்த்தி செய்த படிவங்களை மண்டல அலுவலகங்களில் நவம்பர் 10-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். மேலும், அனைத்து இணையதள மையங்களிலும் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x