

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிய மிக்கப்பட்டுள்ள சிறப்பு அதி காரிகளின் பதவிக்காலம் தற்காலிகமானது. தேர்தல் நடை பெறும் வரை மட்டுமே அவர்கள் அப்பதவியில் நீடிப்பர் என தமிழக அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என அவர்கள் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரி வித்து ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் முதன்மைச்செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவின் அடிப்படையில் உள் ளாட்சி அமைப்புகளை நிர் வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிலு வையில் இருந்து வருகிறது. அதனால் உள்ளாட்சி அமைப்பு களை காலியாக வைக்கக் கூடாது என்பதற்காக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு அதிகாரிகள் நியமிக் கப்பட்டு அவர்களின் பதவிக் காலம் தற்காலிகமாக நீட்டிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்காலிகமாகவே அப்பதவியில் நீடிப்பர். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண் டும்” என அதில் தெரிவித்துள்ளார்.