

குறைந்த மதிப்பெண் பெற்றவர் களுக்கு 2 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், 28 மாணவர்கள் நிவாரணம் கோரி உச்ச நீதிமன் றத்தை அணுகலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2-வில் அதிக மதிப் பெண் பெற்ற கே.எஸ்.நவீன் பிரியா, எம்.யசீதா, மோனிகா பிரியா, ராசிரங்கராஜ் உட்பட 28 மாணவர்கள் மருத்து வக் கல்லூரியில் சேர விண்ணப் பித்தனர். முதலாவது, 2-வது, 3-வது கவுன்சலிங்கிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சிலருக்கு தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாது என்பதால், அவர்கள் அக்கல்லூரிகளில் சேரவில்லை.
அரசு ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ.3 லட்சம். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தால் ஆண்டுக் கட்டணம் ரூ.12 ஆயிரம் மட்டும்தான்.
இந்நிலையில், சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரியும், திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தங்களது கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பட்டியலை செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட்டது.
அப்போது, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் அங்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தங்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி 28 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:
மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் தகுதி அடிப்படை யிலான பட்டியலுக்கு பதிலாக, அதிக மதிப்பெண் பெற்றுள்ள மனுதாரர்களை தவிர்த்துவிட்டு வேறொரு பட்டியலை தேர்வுக் குழு அனுப்பியது தெரியவந்துள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு மாணவனுக்கு இடம் கிடைத்து, அதில் அவர் சேராவிட்டால், கவுன் சலிங்கில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் வேறொரு மாணவர் அந்த இடத்துக்கு உரிமை கோர முடியாது என்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் விளக்கக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான், மனுதாரர்களின் பெயர்களை விட்டுவிட்டு, மேற் சொன்ன 2 மருத்துவக் கல்லூரி களுக்கும் பட்டியலை தேர்வு குழு அனுப்பியிருக்கிறது.
குறைவான மதிப்பெண் பெற்ற வர்களின் பட்டியலை தேர்வுக் குழு அனுப்பியது மனுதாரர்களுக்கு இழைத்த அநீதி. இருந்தாலும், 2 மருத்துவக் கல்லூரிகளுக்கும் புதிய பட்டியலை அனுப்பும்படி உத்தரவிட்டால், ஏற்கெனவே அங்கு சேர்ந்து படிக்கும் 216 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய பட்டியல் அனுப்பும்படி தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட முடியாது.
2 மருத்துவக் கல்லூரிகளிலும் இன்னும் 84 இடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மருத்து வக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதியே முடிந்துவிட்டது.
இந்த நிலையில், காலியிடத்தை நிரப்ப உத்தரவிட்டால், மனுதாரர் களைவிட அதிக மதிப்பெண் எடுத்தவர்களும் வழக்கு தொடர் வார்கள். எனவே, மனுதாரர்கள் அனைவரும் நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் இத்துடன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி ராமசுப்பிர மணியன் தீர்ப்பளித்தார்.