Published : 06 Jun 2017 08:27 AM
Last Updated : 06 Jun 2017 08:27 AM

டிடிவி. தினகரனை விலக்கும் அறிவிப்பு: ஆலோசித்து முடிவு செய்வதாக ஓபிஎஸ் அணி கருத்து

அதிமுகவில் இருந்து டிடிவி. தினகரன் மற்றும் அவரை சார்ந்த வர்களை விலக்கி வைப்போம் என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் அறிவிப்பு குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை தெரி வித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத் தைப் பெற தேர்தல் ஆணையத் துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தாக அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கைது செய்யப் பட்டார்.

அதன் பிறகு தமிழக அரசிய லில் அதிரடி மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் எனவும், இதற்காக ஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த தயாராக இருப்ப தாகவும் முதல்வர் கே.பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர்.

இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஓபிஎஸ் அணியின் வேண்டுகோளை ஏற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்த சசிகலா, தினகரன் படங்கள் அகற்றப்பட்டன. ஆனா லும் இரு தரப்பிலும் மாறிமாறி குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டதால் இணைப்பு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.

இருதரப்பினரும் நாங்கள்தான் உண்மையான அதிமுக எனக்கூறி, கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்ட பல்லாயிரக்கணக்கான பக்கங் களைக் கொண்ட ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித் தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் கே.பழனிசாமியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரன் கடந்த 2-ம் தேதி ஜாமீ னில் விடுவிக்கப்பட்டார். 3-ம் தேதி சென்னை வந்த அவர், கட்சிப் பணியை தொடர இருப்பதாக அறிவித்தார். நேற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘‘கட்சியைக் காப்பாற்ற தொண்டர்கள் தன்னை அழைப்பதாகவும், தான் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன்’’ என தெரிவித்திருந்தார். அவருடன் 10-க்கும் அதிகமான எம்எல்ஏ.க்கள் உடனிருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள் 19 பேர் நிதி அமைச்சர் டி.ஜெயக் குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோ சனை நடத்தினர். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய டி.ஜெயக் குமார், ‘‘கட்சி நலன், ஆட்சி நலன் இரண்டையும் கருத்தில் கொண்டு தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை ஒதுக்கி வைப்பது என்று கடந்த ஏப்ரல் 17-ம் தேதி எடுத்த முடிவில் உறுதியாக இருக் கிறோம்’’ என அறிவித்தார்.

இதனால் மீண்டும் அதிமுக இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அக் கட்சியினரிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ் அணி யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையிடம் கேட்டபோது, ‘‘அமைச்சரின் அறிவிப்பு குறித்து எங்கள் தலைவர் ஓபிஎஸ்ஸுடன் ஆலோசித்த பிறகுதான் எதுவும் கூற முடியும். தற்போதைக்கு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை’’ என்றார்.

நாடகம்

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை ஒதுக்கி வைப்பதாக ஏற்கனவே கூறியதைத் தான் மீண்டும் கூறியுள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்து ரைக்க வேண்டும், சசிகலா குடும் பத்தினரை கட்சியிலிருந்து முழுமை யாக அகற்ற வேண்டும் என்ற எங்களின் இரு நிபந்தனைகளையும் அவர்கள் ஏற்கவில்லை. தின கரனை ஒதுக்கி வைப்பதாக திரும்ப திரும்ப கூறுபவர்கள் சசிகலா, தினகரன் இருவரையும் கட்சிப் பொறுப்புகளில் நீக்க மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்தும் சசிகலா, தினகரன் நடத்தும் நாடகம். எனவே, இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவை ஓபிஎஸ் எடுப்பார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x