

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக (டெக்ஸ்கோ) தின விழா சென்னை ராணுவ நிறுவன மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, டெக்ஸ்கோ மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆர்.கே.ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 18 பேருக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் பணியாளர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியின்போது உயிரிழந்த 3 பணியாளரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் விபத்து உதவித்தொகையும் வழங்கப்பட்டது.