

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சி அமைக்கப்பட் டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி 7 நாட்கள் நடக்க உள்ளது. கண்காட்சியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு ஊழல், முறைகேடுகள் இல்லாமல் 3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மோடி அரசு தொடரவே மக்கள் விரும்பு கின்றனர். தற்போது தேர்தல் நடந் தாலும் மோடியே மீண்டும் பிரதம ராக வருவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப்போல நாங்கள் ஊழல் செய்யவில்லை.
மத்திய அரசே மாநிலங்களுக்குச் சென்று சேவை செய்து வரு கிறது. மத்திய அரசு தனது வருவா யில் 42 சதவீதத்தை மாநிலங் களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநில அரசுடன் இணைந்து பணியாற் றவே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஜெய லலிதா முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகம் வந்து ஆலோசித்துள்ளேன். மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மாநிலத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு உதவும்.
பொருளாதார வளர்ச்சி
கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 835 உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் 4 சதவீதமாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயி கள் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கப் பார்க்கிறது. இது தரம் கெட்ட அரசியல். நாட்டில் ஊழல், வறுமையை ஒழித்து வளர்ச்சியடையச் செய்வது மட்டுமே எங்களது நோக்கம். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தவே வலியுறுத்தியது. உணவு சாப்பிடுவது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பமாகும். இதில், மத்திய அரசு தலையிடாது.
என்டிடிவி விவகாரம்
நாடு முழுவதும் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. என்டிடிவி விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறாக அவதூறு பரப்பி வருகின்றனர். என்டிடிவி நிர்வாகத்தினரிடம் சில விளக்கங் கள் மட்டுமே கேட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை 2011-12 ஆண்டில் தொடங்கியதாக சிபிஐ தெரிவிக்கிறது. அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தது?
சமீபத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியுள்ளனர். மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அதிமுக உட்கட்சி விவகாரம்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையுடன் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிமுக மட்டுமின்றி, அனைத்துக் கட்சி யினரையும் அணுகுவோம். குடி யரசுத் தலைவர் வேட்பாளர் மதசார்பற்ற வேட்பாளராக இருப் பார்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.