

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அரசின் சார்பில் 32 மாவட்டங் களிலும் 2018 ஜனவரி மாதம் வரை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்தது. மாவட்டந்தோறும் பெரிய அளவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க விழாவை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தவும், இதில் திரளானோரை பங்கேற் கச் செய்யவும் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக தீவிர ஏற்பாடு நடந்து வருகிறது. விழாவுக்காக பல்லாயிரம்பேர் அமரும் வகை யில் மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகே தோரண வாயிலுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் ஒரு லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற் கின்றனர். 50 ஆயிரத்துக்கும் அதிக மான பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக மாவட்டம் முழுவதிலுமிருந்து 3 ஆயிரம் பேருந்துகளில் விழாவுக்கு பய னாளிகள் அழைத்து வரப்பட உள்ளதாக அமைச்சர்கள் தெரி வித்தனர்.
காலை 11 மணிக்கு விமான நிலையத்துக்கு முதல்வர் வருகி றார். முதல்வருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப் படுகிறது. விழா மைதானத்தில் செய்தித்துறை சார்பில் எம்ஜிஆர் புகழ்பரப்பும் புகைப்பட கண் காட்சியை முதல்வர் திறந்து வைத்து எம்ஜிஆர் படத்துக்கு மரியாதை செலுத்துகிறார்.
மாலை 5 மணிக்கு அரசு விழா துவங்குகிறது. தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் வரவேற்கிறார். சபாநாயகர் ப.தனபால் தலைமை வகிக்கிறார்.