சென்னை ஜி.ஹெச்.சில் இளைஞர் மரணம்: டெங்கு காய்ச்சலா?

சென்னை ஜி.ஹெச்.சில் இளைஞர் மரணம்: டெங்கு காய்ச்சலா?
Updated on
1 min read

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி. நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (27). திருமணமானவர். இவர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த ஒரு வாரமாக மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை மோசமானதால், நேற்று காலை 8 மணி அளவில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பகல் 11.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in