விருத்தாச்சலம் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியால் ரயில் சேவையில் மாற்றம்

விருத்தாச்சலம் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியால் ரயில் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

விருத்தாச்சலம் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, மதுரை-விழுப்புரம் பயணி கள் ரயில் (56706/705) வரும் 26, 27, 28-ம் தேதிகளில் அரியலூர் - விழுப்புரம் இடையேயும், விருத்தாச்சலம் - சேலம் பயணிகள் ரயில் (76849/850) முகாசபரூர் - விருத்தாச்சலம் இடையே மார்ச் 28-ம் தேதியும், பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயில் (56514) 28-ம் தேதி விருத்தாச்சலம் - காரைக்கால் இடையேயும், காரைக்கால் - பெங்களூர் பயணிகள் ரயில் (56513) 28-ம் தேதி காரைக்கால் - முகாசபரூர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - கடலூர் துறைமுக சந்திப்பு பயணிகள் ரயில் (76842) 28-ம் தேதி செந்துறையில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் (76850/849) வரும் 27-ம் தேதி வரை முகாசபரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் நேரம் மாற்றம்

நாகர்கோயில் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் (16352) 26-ம் தேதி காலை 5 மணிக்கு பதிலாக 60 நிமிடம் காலதாமதமாக புறப்படும். திருச்சி - ஹவுரா விரைவு ரயில் (12664) 28-ம் தேதி திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்குப் பதிலாக 75 நிமிடம் காலதாமதமாக புறப்படும்.

சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) 28-ம் தேதி எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கம்

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (16127) 26, 27, 28-ம் தேதிகளில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும். அதேபோல், குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), சென்னை எழும்பூர்-மதுரை வைகை விரைவு ரயில் (12635), மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஆகியவை 28-ம் தேதி விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

இதேபோல், சென்னை எழும்பூர் - திருச்சி (06047) இடையே வரும் 24, 28, 31-ம் தேதிகளிலும், திருச்சி - எழும்பூர் (06048) இடையே வரும் 23, 27, 30-ம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ள சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், ஆத்தூர் வழியாக இயக்குவதற்குப் பதிலாக சென்னை கடற்கரை, அரக்கோணம், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in