

புதிய கட்சியால் வாசன் எதையும் சாதிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை பாஜக ஊழியர்கள் கூட்டம் கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் கூட்டம் தொடங்கும் முன்பு செய்தியா ளர்களிடம் கூறிய தாவது:
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்த இத்தகைய ஊழியர்கள் கூட்டத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் பாஜக நடத்தி வருகிறது.
மோடி அரசின் சாதனைகளை தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்வர். பாஜக மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 12-ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுக்க பாஜகவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தொலைபேசி மூலமும் உறுப்பினர் சேர்ப்பு நடக்கும்.
நவம்பர் 1-ம் தேதி தொடங் கிய கட்சி உறுப்பினர் சேர்க்கை யின்போது முதலாவதாக நரேந்திர மோடி உறுப்பினராகச் சேர்ந்துள்ளார். இதுவரை நாடு முழுவதும் 45 லட்சம் பேர் பாஜக உறுப்பினர்களாக இணைந் துள்ளனர். இங்கே இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளால் வலுவிழந்துள்ளன. புதிய கட்சியால் வாசன் பெரிய சாதனை எதுவும் நிகழ்த்த முடியாது.
சென்ற தேர்தலில் கோவை யில் குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாஜக தற்போது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பலம் பொருந்திய மாற்று சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் முறைப்படியான ஆட்சி நடக்கவில்லை. முதல்வர் பன்னீர் செல்வம் பயந்து பயந்து ஆட்சி நடத்தி வருகிறார்.
பாம்பாறு அணை கட்டும் விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகவே நடந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள், மீனவர்கள் ஆகியோர் விஷயத்தில் பாஜக மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மோடியை குறைகூறி வருவதை பாஜக தொண்டர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றார்.