

இந்தியாவில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல ஆண்டு தோறும் தாங்கள் பணியாற்றும் மாநில அரசிடம் விருப்பம் தெரிவிக் கலாம். அதில், தேவைப்படு பவர்களை வைத்துக்கொண்டு மீதம் உள்ளவர்களை மத்திய அரசுப் பணிக்கு செல்லும் வகை யில் மாநில அரசு விடுவிக்கும்.
தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி யான அர்ச்சனா ராமசுந்தரம், மத் திய அரசுப் பணிக்கு சென்று சிபிஐ இயக்குநராக பணியாற்றி னார். இதேபோல அஸ்ரா கார்க், சத்யப்பிரியா, தேன்மொழி உள் ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்தியப் பணிக்கு சென்றனர். மத்திய அரசுப் பணிக்கு சென்றால் குறைந்தது 3 முதல் 7 ஆண்டுகள் வரை மீண்டும் மாநிலப் பணிக்கு திரும்ப முடியாது.
இந்நிலையில், தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் தற்போது மத்தியப் பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குறுகிய இடைவெளியில் 2 முறை பணிமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தான் மாற்றப்படலாம் என்ற எண்ணத்திலேயே அவர் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்படு கிறது. கூடுதல் டிஜிபிக்கள் சஞ்சஜ் அரோரா, மாகாளி உட்பட மேலும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு செல்ல ஏற் கெனவே அனுமதி வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இதில், சஞ் சய் அரோரா, சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப் படலாம் என எதிர்பார்க்கப்பட்டவர்.
மேலும் மாநில நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு ஐஜி ஈஸ்வர மூர்த்தி, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அடிக்கடி அதிகார மையங்கள் மாறுவதால் பலர் மாநிலப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்புவ தாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழல் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்லும் மன நிலையை ஏற்படுத்தியதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.