

இடைப்பாடியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் போலீஸ் ஏட்டு, அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் பலியாகினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). இவர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகுணா. ஈரோட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வெங்கடேன் நேற்று இரவு மீண்டும் மனைவி மற்றும் தனது 5 மற்றும் 3 வயது மகன்களுடன் ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இடைப்பாடி அடுத்த எட்டிக் குட்டை ரோட்டில் சென்றபோது முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வெங்க டேசன், சுகுணா மற்றும் இரு குழந்தைகளும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இது குறித்து இடைப்பாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.