Published : 18 Apr 2017 09:04 AM
Last Updated : 18 Apr 2017 09:04 AM

பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்க தூத்துக்குடியில் ரூ.38 கோடியில் கரைப்பான் உற்பத்தி ஆலை: அணு உலைகளின் தேவையை பூர்த்திசெய்ய நடவடிக்கை

பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்கும் கரைப்பான் (சால்வென்ட்) உற் பத்தி செய்யும் ஆலை, தூத்துக் குடியில் ரூ.38 கோடியில் அமைக்கப் படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள அணு உலைகள், யுரேனியம் எரி பொருள் மூலம் செயல்படுகின்றன. ஆனால், இந்தியாவில் யுரேனியம் வளம் இல்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி யுள்ளது. எனவே, இந்திய தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் பாஸ் பாரிக் அமிலத்தில் இருந்து யுரேனி யத்தை, கரைப்பான் (சால்வென்ட்) மூலம் பிரித்தெடுக்கும் திட்டத்தை, இந்திய அணுசக்தி துறை செயல் படுத்தி வருகிறது. இதற்காக ஒடிசா மற்றும் குஜராத்தில் ஏற்கெனவே 2 சிறிய அளவிலான சால்வென்ட் உற்பத்தி ஆலைகளை, அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் கனநீர் வாரியம் நிறுவியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைகளில் பாஸ் பாரிக் அமிலம் அதிக அளவில் உற் பத்தி செய்யப்படுகிறது. எனவே, தூத்துக்குடியில் சால்வென்ட் ஆலை அமைக்க கனநீர் வாரியம் முடிவு செய்தது. இங்கு உள்ள கனநீர் ஆலை வளாகத்தில், சால்வென்ட் ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்திய கனநீர் வாரியத் தலைவர் ஏ.என்.வர்மா, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அணு உலை களுக்கு யுரேனியம் அதிகமாக தேவைப்படுகிறது. அதன் இறக்கு மதியை குறைக்கும் வகையில், இந்திய ஆலைகளில் உற்பத்தி யாகும் பாஸ்பாரிக் அமிலத்தில் இருந்து, யுரேனியத்தை கரைப் பான் (சால்வென்ட்) மூலம் பிரித் தெடுத்து, அதனை அணு உலை களில் பயன்படுத்த முடியும்.

நாட்டிலேயே பெரிய ஆலை

கரைப்பான் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் 2 ஆலைகள் ஏற் கெனவே இந்தியாவில் உள்ளன. இவை சிறியவை. நாட்டிலேயே பெரிய சால்வென்ட் ஆலை, தூத் துக்குடியில் ரூ.38 கோடியில் அமைக் கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி 15 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு சால்வென்ட் உற்பத்தி தொடங்கும். இங்கு உற்பத்தி செய் யப்படும் சால்வென்ட், இந்திய அணுசக்தி துறைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதுபோன்று மேலும் சில சால்வென்ட் ஆலை கள் தூத்துக்குடியில் நிறுவப்படும். அணு மின் உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவுபெறும் என்றார்.

கனநீர் வாரிய இயக்குநர் (தொழில்நுட்பம்) சி.சேஷசாய், உதவி இயக்குநர் (சால்வென்ட்) எஸ்.கே.நாயக், பொதுமேலாளர் (சால்வென்ட்) எஸ்.சஹா, தூத்துக் குடி கனநீர் ஆலை பொதுமேலாளர் வி.பி.நேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x