

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ரூ.3 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது பற்றி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
"மெட்ராஸ் பார் பார் கவுன்சில் என்பது 1928-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலாக செயல்படும் இந்த பார் கவுன்சிலின் செயல்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. வழக்கறி ஞர்களின் எண்ணிக் கையும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
இந்நிலையில் பார் கவுன்சிலுக்காக உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 2 மாடிக் கட்டிடத்தில் பல நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் திறந்து வைக்கிறார்கள்" என்றார் அவர்.