10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு நாளை தொடக்கம்

10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு நாளை தொடக்கம்
Updated on
1 min read

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்கு கின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் 20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்கு கின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வை 10,677 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 3,503 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இதேபோல, 10-ம் வகுப்பு தேர்வை 16,354 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 84 ஆயிரத்து 710 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 3,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதியும் 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதியும் முடிவடைகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in