Published : 16 Jun 2016 08:13 AM
Last Updated : 16 Jun 2016 08:13 AM

சென்னை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளை தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மற்றும் டி.ரவிக்கு மார், ரமேஷ்நாதன் ஆகியோர் கடந்த 2006-ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின்படியும், அரசியல மைப்புச் சட்டம் வலியுறுத்தியுள்ள படியும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ள மாநகராட்சியில், அந்த மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13.7 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் சென்னையில் வசிக் கின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கு முரண்பாடாக கடந்த ஆண்டுகளில் திருநெல் வேலி மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல சேலம் மாநகராட்சி மேயர் பதவியும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்கள் என சேர்த்து ஒதுக்கப் பட்டுள்ளது. எந்த மாநகராட்சி யிலும் துணை மேயர் பதவியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை. இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை.

எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களு க்கு ஒதுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் பெண்கள் என்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதை தாழ்த்தப்பட்ட வர்களுக்காக மட்டும் என அறிவிக்க வேண்டும். துணை மேயர் பதவிகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுபோல தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்பு களில் சுழற்சி முறையில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x