Published : 22 Jan 2017 10:28 AM
Last Updated : 22 Jan 2017 10:28 AM

ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தமாக நடைபெற மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தன்னெழுச்சியாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 6 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். ‘வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என்ற ஒரே முழக்கத்துடன் கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக போராடி வருவதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன், பாராட்டு கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அவசரச் சட்டம் முழுமையான மனநிறைவை அளிக்கவில்லை.

நிரந்தர சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் காளை களை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):

வாட்டும் குளிரில், கொளுத்தும் வெயிலில், கொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரிய முறையில் பிரச்சினையை கையாண்டு, சட்ட வல்லுநர் களுடன் ஆலோசித்து மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புத லோடு தமிழக ஆளுநரால் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. எனவே, ஜல்லிக்கட்டை நிரந்தரமாக பாதுகாக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்):

தமிழர்களின் ஒற்றுமை உணர் வுக்கு மதிப்பளித்து விரைவில் காளையை காட்சிப்படுத்தப் படாத பட்டியலில் இருந்து நீக்கி சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x