

ஐடிஐ, டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் சூரிய மின்சக்தி தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த இலவச பயிற்சி முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பொதுமக்களிடம் சூரிய மின்சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரு கிறது. இதன் விளைவாக வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்க ளில் சூரிய மின்சக்தி பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதனால் இதற்கு வேண்டிய உபகரணங்களை தயாரிக்கும் பணியும் அதிகரித்துள்ளது. இதனால் சூரிய மின்சக்தி உபகரணங்களை தயா ரிக்கும் தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு எரிசக்தி மேம் பாட்டு முகமை புதிதாக சூரிய மின்சக்தி தொழில்நுட்ப பயிற்சியை அறிமுகப் படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் (பைலட் திட்டம்) இது தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதி உதவியுடன் இப்பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், 12-ம் வகுப்பு முடித்து ஐடிஐ அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சிக் காலம் 38 நாட்கள் அல்லது 300 மணி நேரம் கொண்டது. இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் தினமும் போக்குவரத்து படியாக ரூ.100 வழங்கப்படும். ஆண்டொன்றுக்கு ஆயிரம் பேர் வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப் பட உள்ளது. தற்போது முதற்கட்டமாக 500 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில் சான்றிதழும், வேலைவாய்ப்புக் கும் உதவி செய்யப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை 044-28224830 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.