

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 3) வெளியாகும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து பல நாள்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற் பட்டு வந்தது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற் றுக்கிழமை வெளியானது. ஆனால் 10-ம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது.
இணையதளத்தில்..
இந்த நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டெல்லி சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளமான www.cbse.nic.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.