தீ விபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதும் இடிப்பு

தீ விபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதும் இடிப்பு
Updated on
1 min read

தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

தியாகராய நகரில் இருந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து பலவீனமான அந்தக் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. ராட்சத ‘ஜாக் கட்டர்’ இயந்திரம் மூலம் இடிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. திடீரென மழை பெய்ததால் கட்டிட இடிப்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இறுதிகட்ட இடிப்புப் பணி தொடங்கியது.

சீட்டுக்கட்டு போலிருந்த கட்டிடத்தின் இறுதிப் பகுதியை இடிக்கும்போது, அதன் இடிபாடு கள் உஸ்மான் சாலை மேம் பாலத்தில் விழுந்து விடக்கூடாது என்பதில் பொறியாளர்கள் கவன மாக இருந்தனர். இது தொடர்பாக நேற்று காலை தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், ஜாக் கட்டர் இயந்திரம் மூலம் கட்டிடத்தின் இறுதி பகுதி கவனமாக இடிக்கப்பட்டது. மாலை 4.10 மணியளவில் கட்டிடம் முழு வதும் இடிக்கப்பட்டு தரைமட்ட மானது.

கட்டிடம் இடிக்கப்பட்டபோது, இடிபாடுகளின் சில பகுதிகள் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் விழுந்தன. இருப்பினும் இதனால் பலத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. கட்டிடம் இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதுகுறித்து இடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத் தினர் கூறியதாவது:

கட்டிட இடிப்புப் பணியில் 10 பொறியாளர்கள், 12 டிரைவர் கள் சுழற்சி முறையில் ஈடுபட்ட னர். இதுபோக 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜாக் கட்டர் இயந்திரம் மூலம் கட்டிடம் முற்றி லும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை இடிக்க ஜாக் கட்டர் இயந்திரத்துக்கு 130 மணி நேரம் தேவைப்பட்டது. சுழற்சி முறையில் தினமும் 30 போலீஸார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடக் கழிவுகள் 2 மாடி அளவுக்கு உள்ளன. இவை இன்னும் ஒரு வாரத்தில் அப்புறப்படுத்தப்படும். அதன் பின்னர் தரை தளத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப் புள்ள தங்க, வைர நகைகள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in