கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் மோதல்: மேசை, நாற்காலிகள் தூக்கிவீசப்பட்டன

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் மோதல்: மேசை, நாற்காலிகள் தூக்கிவீசப்பட்டன
Updated on
1 min read

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. மேசை, நாற்காலிகள் தூக்கிவீசப்பட்டன.

கிருஷ்ணகிரி நகர்மன்ற அவசரக் கூட்டம் மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. நகர்மன்றத் தலைவர் தங்க முத்து தலைமை வகித்தார். ஆணை யாளர் (பொறுப்பு) முருகன் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் 36 பொருட்கள் மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விவாதம் நடந்தது. 2-வது வார்டு உறுப்பினர் சோபன்பாபு (அதிமுக), தரமற்ற தார் சாலைகள் போடப்படுகின்றன. எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை உறுப் பினர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிமுக உறுப் பினர்களுக்கு வழங்கப்படுவ தில்லை என்றார். சுயேச்சையாக பேட்டியிட்டு அதிமுகவில் இணைந்த மாதையன் இதற்கு மறுப்பு தெரிவித்து பேசும்போது, அவையில் கூச்சல், குழப்பம் நிலவி யது. தேமுதிக உறுப்பினர் மணிகண் டன், மாதையனை சமாதானம் செய்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை அரங்கின் வெளியே இருந்த பார்த்த மாதையனின் மகன் மற்றும் சிலர் அவைக்குள் அத்துமீறி நுழைந்து மணிகண்டன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தினர்.

நகர்மன்றத் தலைவர் தங்க முத்து இருதரப்பினரையும் சமாதா னம் செய்ய முயன்றார். ஆனால் தொடர்ந்து இரு தரப்பினரும் தக ராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திர மடைந்த அதிமுக நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், அதிமுக உறுப்பினர்களான சோபன் பாபு, மாரியப்பன், சீனிவாசன், மற்றொரு சீனிவாசன், புகழேந்தி உள்ளிட்ட சிலர் அவையிலிருந்த நாற்காலி, மேசை, கண்ணாடிகளை தூக்கி வீசி உடைத்தனர். நகர்மன்றத் தலைவரின் மேசை, நாற்காலியும் தூக்கி வீசப்பட்டது.

மோதலில் காயமடைந்த அதிமுக உறுப்பினர்கள், அவையில் பாதுகாப்பு இல்லை, வெளி ஆட்களை வைத்து தாக்குவதாகத் தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் உறுப்பினர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பழையப்பேட்டை - ரவுண்டானா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகர போலீஸார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். காயம் அடைந்த இருதரப்பினரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இருதரப்பினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in