

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று, உதகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, எங்கள் பலத்தை நிரூபிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் தமாகா அதிக இடங்களில் போட்டியிடும். இதற்காக மாநிலம் முழுவதும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். கூட்டணி அமைப்பதைவிட, தனித்துப் போட்டி யிட்டு, தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே தமாகா விரும்புகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
கடந்த 12 ஆண்டுகளாக நடந்த சுமார் 25 இடைத்தேர்தல்களில், முடிவுகள் ஒரு சாராருக்கு சாதகமாகவே ஏற்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் தமாகாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமாகா போட்டியிட வில்லை என்ற முடிவு சரியானதே என்றார்.