Published : 17 Sep 2016 09:18 AM
Last Updated : 17 Sep 2016 09:18 AM

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க அதிமுகவில் 14 பேர் கொண்ட மேற்பார்வைக் குழு: ஜெயலலிதா அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க அதிமுகவில் 14 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணி களையும் மேற்பார்வையிட அமைக்கப்பட்டிருந்த குழு திருத்தி அமைக்கப்படுகிறது.

அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைப்புச் செயலாளர்கள் பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, செ.செம்மலை, இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னச்சாமி, சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், செயலாளர் ஏ.அன்வர்ராஜா, மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், அமைச் சர் டி.ஜெயக்குமார் ஆகிய 14 பேர் இக்குழுவில் இடம்பெறு வார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா அறி வித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பு பவர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற 50 மாவட் டங்களுக்கு 50 பேர் குழுவை யும், தேர்தல் பணிகளை மேற் பார்வையிட ஓ.பன்னீர்செல்வம், மு.தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், செ.செம்மலை, டாக்டர் பி.வேணுகோபால் ஆகிய 5 பேர் கொண்ட குழுவையும் கடந்த 13-ம் தேதி ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவில் மேலும் 9 பேர் சேர்க்கப்பட்டு 14 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

22-ம் தேதி வரை..

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவது நேற்று தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x