

தமிழகத்தில் ஆள் பலம், பண பலத்தைக்கொண்டு ஆட்சி அமைக் கப்பட்டிருப்பது மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல என்று கேரள அரசின் முன்னாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருமான பினாய் விஸ்வம் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் ஆள் பலம் மற்றும் பண பலத்துடன் தற்போது ஆட்சி அமைந்துள்ளது. இது தமிழக மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. பெரியார் பாரம்பரி யத்தில் உள்ள இந்த மண்ணில் திராவிட இயக்கங்கள் சீரழிந்து விட்டன. அவர்கள் பெரியாரின் பாரம்பரியத்தை கைவிட்டு விட்டனர்.
தமிழகம் மாபியாவிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து தமிழக மக்கள் மீள வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழகத்தில் ஆக்கப் பூர்வமான அரசியல் சக்திகள் உருவாக வேண்டும்.
நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் பெரிதும் பாதித்திருக்கிறது. குடிநீருக் காக மக்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள். இந்த மோச மான நிலைமையைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ள வில்லை. எனவே, குடிநீர் தட்டுப் பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம், கல்வி சீர்திருத்தம், அனைவருக்கும் வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத் திந்திய மாணவர் பேரவை சார்பில் 45 நாள் தேசிய பிரச்சார இயக்கம் வரும் மே 3-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கு கிறது. பல்வேறு மாநிலங்கள் வழியாக பகத்சிங் பிறந்த பஞ்சாப் மாநிலத்தில் முடிவடையும்.
கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்து, நீர்வழிப் பாதைகளை அடைத்து பிரம்மாண்ட சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை திறக்க நாட்டின் பிரதமர் வருவது சட்டவிரோத செயலுக்கு துணை போவது போலாகிவிடும். இவ்வாறு பினாய் விஸ்வம் கூறினார்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி உடனி ருந்தார்.