

எங்களுக்கு சொந்தமான இடங் களில் திடீரென வருமான வரித் துறை சோதனை நடைபெற்ற தற்கு அரசியல் காழ்பபுணர்ச் சியே காரணம் என்று அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி, அண்ணன் சி.உதயகுமார் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை மண்டல அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராவதற்காக நேற்று வந்தனர்.
அப்போது, செய்தியாளர் களிடம் சின்னதம்பி கூறியது:
சோதனையின்போது எதை யும் வருமான வரித்துறையினர் கைப்பற்றவில்லை. எங்களைத் துன்புறுத்தவும் இல்லை. நகை களை மதிப்பீடு செய்தவற்காக லாக்கரை பூட்டி வைத்துள்ளனர்.
இந்த திடீர் சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். ஆனால், சோதனைக்கு இவர்தான் காரணம் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை என்றார்.