

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவை திமுக முக்கிய தலை வர்கள் மும்பையில் இன்று சந்திக் கின்றனர். இதற்காக திமுக முதன் மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேற்று மாலை மும்பை புறப்பட்டுச் சென்றனர்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டு வரு கிறார். எனவே, அவர் பெரும் பாலும் மும்பையிலேயே இருந்து வருகிறார்.
ஆர்.கே.நகரில் இன்று (ஏப்ரல் 12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக் காமல் ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் கண்டனம் தெரிவித்துள் ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்து ஆர்.கே.நகரில் இன்று திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விநி யோகம் செய்யப்பட்டது தொடர் பாக வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பெயர் கள் இடம்பெற்றுள்ளதாக கூறப் படுகிறது. அதன் அடிப்படையில் முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேற்று மும்பை சென்றனர்.
இன்று காலை 11 மணிக்கு மும்பை ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை அவர்கள் சந்திக்கின்றனர்.