

அனைத்து மாவட்டங்களிலும் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபட் யாசோ நாயக் தெரிவித்தார்.
மத்திய ஆயூஷ் அமைச்சக அமைச்சர் ஸ்ரீபட் யாசோ நாயக் தஞ்சாவூரில் நேற்று கூறியதாவது:
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவங்களுக்கு மருத்துவர் களைத் தனியாக நியமிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் தேசிய அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000-க்கும் அதிகமான சித்த மருத்துவ, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் ஆயுர்வேத மருத்துவ மனை அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக ரூ.10.5 கோடி நிதி வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.