Published : 14 Mar 2017 08:45 AM
Last Updated : 14 Mar 2017 08:45 AM

சென்னையில் இன்று ஆவணப்பட ஆய்வரங்கம்: நல்லகண்ணு, சீனு ராமசாமி, லிங்குசாமி பங்கேற்பு

ஆவணப்படம் குறித்த ஆய்வரங்கம் சென்னையில் இன்று நடக்கிறது.

‘ஒலிவியம் படைப்பகம்’ என்ற தன்னார்வ அமைப்பு, சென்னை பல்கலைக்கழகம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து ‘ஆவணப்படம் அவசரம் அவசியம்’ என்ற தலைப்பில் தேசிய ஆய்வரங்கத்தை சென்னையில் இன்று நடத்துகின்றன.

சென்னை கடற்கரை சாலை திருவள்ளுவர் சிலை எதிரில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழக மெரினா வளாக அரங்கில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஆய்வரங்கம் நடக்கிறது.

இதில் பிரபல எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர்கள் சீனு ராமசாமி, சி.வி.குமார், சமூக செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர்கள் என 20-க்கும் அதிகமானோர் தங்களது அனுபவங் களை பகிர்ந்து கொள்கின்றனர்.

மாலை 5 மணிக்கு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, படத்தொகுப்பாளர் பி.லெனின், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், நபார்டு வங்கி அதிகாரி நாகூர் அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

திருநின்றவூர் தி.சந்தான கிருஷ்ணனுக்கு சிறந்த ஆவணக் காப்பாளருக்கான 2017-ம் ஆண்டு ‘ஒலிவியம் விருது’ வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x