

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் மலேசியாவுக்கு புறப்படத் தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்ய வந்த மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தியிடம் 5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கோவிந்தமூர்த்தியை அதிகாரி கள் கைது செய்தனர்.