Published : 11 Sep 2016 09:47 AM
Last Updated : 11 Sep 2016 09:47 AM

3 நாட்களாக நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கடைசிக் கூட்டம் நிறைவு: அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மேயர்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசிக் கூட்டம் நேற்றுடன் நிறை வடைந்தது. மேயர் சைதை துரை சாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப் படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசிக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. உறுப்பினர்கள் அனைவரும் பேச வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் 3 நாட்களுக்கு கூட்டம் நீட்டிக்கப் பட்டது.

மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக கவுன் சிலர்கள், தங்கள் வார்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்தும், அதற்காக முதல்வர் ஜெய லலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் பேசினர். திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் பணிகள் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டி பேசினர்.

இறுதியாக மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:

கடந்த 2011 முதல் 2016 வரை சென்னை மாநகராட்சியில் ரூ.115 கோடியில் 5 மேம்பாலங்கள், 3 சுரங்கப்பாதைகள், 10 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநக ராட்சியின் பொது சுகாதாரத்துறை தொற்றுநோய் மருத்துவமனையில் ஓராண்டு சுகாதார ஆய்வாளர் பயிற்சி நடத்த அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு 30 பேர் பயிற்சி பெறலாம். இதில் அடிப்படை சுகாதாரப் பணி யாளர்களாக பணிபுரிவோர், மாநகராட்சி பணியாளர்களின் வாரி சுகள், மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5 லட்சம் நொச்சி செடிகள்

கொசுக்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த ரூ.35 லட்சம் செலவில், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், பொதுநல சங்கங்களுக்கு 5 லட்சம் நொச்சிச் செடிகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாநகராட்சி பூங்காக்களிலும் நொச்சி செடிகள் நடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரி யப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்த முதல்வர் ஜெய லலிதாவை பாராட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சியில் மேற்கொள்ளப் பட்ட பணிகளுக்கு உறுதுணையாக இருந்த சேவைத் துறைகள், மாநகராட்சி பணியாளர்கள், கவுன் சிலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பின் கூட்டம் நிறைவடைவதாக மேயர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகை நுழைவாயிலில் மேயர், ஆணையருடன் கவுன்சிலர் கள் அனைவரும் அமர்ந்து குழு புடைப்படம் எடுத்துக் கொண்டனர்.

திமுக உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பிரச் சினைகள் குறித்து மன்றத்தில் பேசவில்லை. முதல்வரின் புகழ் பாடும் கூட்டமாகவே மாநகராட்சி மன்ற கூட்டம் இருந்தது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x