Published : 18 Apr 2017 08:39 AM
Last Updated : 18 Apr 2017 08:39 AM

வருமான வரி அதிகாரிகளுக்கு இடையூறு: 3 அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்கியது - காவல் துணை ஆணையர் விசாரித்தார்

வருமான வரித்துறை அதிகாரி களுக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரில் 3 அமைச்சர்கள் உட்பட 4 பேர் மீதும் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கடந்த 7-ம் தேதி வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிட்லபாக் கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோ ருக்கு சொந்தமான இடங்களிலும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 55 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்தபோது அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தள வாய் சுந்தரம் ஆகியோர் வருமான வரி புலனாய்வு அதிகாரிகளுக்கு இடையூறு செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சரத் குமார் வீட்டில் சோதனை நடந்தபோது, அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அபிராமபுரம் போலீஸார் 4 பேர் மீதும் 4 பிரிவு களில் வழக்கு பதிந்தனர். இந்நிலை யில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், 4 பேர் மீதும் முதல் கட்ட விசாரணையை துவக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x