புதுச்சேரியில் செப்டம்பர் முதல் விமான சேவை: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் செப்டம்பர் முதல் விமான சேவை: முதல்வர் நாராயணசாமி தகவல்
Updated on
1 min read

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘பொருளாதார வளர்ச்சியில் துறைமுகத்தின் முக் கியத்துவம்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் வி.நாராயண சாமி பேசியதாவது:

புதுச்சேரி துறைமுகத்தை தூர் வாரும் பணி தற்போது நடை பெற்று வருகிறது. புதுச்சேரி துறை முகத்துக்கு அருகில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை மேம்படுத்த, அந்தப் பகுதியில் ஹோட்டல்கள், நீர் விளையாட்டு கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த சாகர் மாலா திட்டத்தின் கீழ் உதவுமாறு கப்பல்துறை அமைச் சகத்திடம் கோரியுள்ளோம். புதுச் சேரி துறைமுகத்தை பார்வையிட ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரவுள்ளார்.

புதுச்சேரியில்தான் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.10-க்கு வழங்கப் படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். மேலும், புதுச்சேரியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நிறுவனங்களுக்குத்தான் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அதோடு, தொழில் தொடங்கும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் 60 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

புதுச்சேரியில் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் விமான சேவை தொடங்கும். புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவை, சேலம், பெங் களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங் களுக்கு விமானங்கள் இயக்கப் படும். புதுச்சேரியில் ரயில் சேவை யும் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலை, சிறு துறை முகங்கள் துறை செய லர் ராஜீவ் ரஞ்சன், சென்னை துறைமுகத்தின் தலைவர் பி.ரவீந் திரன் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in