‘சீல்’ வைக்கப்பட்ட 30 கிடங்குகளில் 4.55 லட்சம் மெ.டன் தாது மணல் இருப்பு: அரசு தடைக்குப் பிறகு அள்ளப்பட்டதா என தீவிர விசாரணை

‘சீல்’ வைக்கப்பட்ட 30 கிடங்குகளில் 4.55 லட்சம் மெ.டன் தாது மணல் இருப்பு: அரசு தடைக்குப் பிறகு அள்ளப்பட்டதா என தீவிர விசாரணை
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் `சீல்’ வைக்கப்பட்டுள்ள 30 கிடங்குகளில் 4,55,245 மெட்ரிக் டன் தாது மணல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, அரசு தடை விதிக்கப்பட்டற்கு பிறகு அள்ளப்பட்டதா என்பது குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் ம.ரவிக்குமார் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடங்களில் உள்ள 30 கிடங்குகள் `சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்குகளில் 4,55,245 மெட்ரிக் டன் கார்னெட், இல்மனைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற தாதுக்கள் இருப்பு உள்ளன. மேலும், 3,12,314 மெட்ரிக் டன் கச்சா தாது மணலும் உள்ளது. இதை தவிர, தலா 1,000 கிலோ வீதம் 2,702 பெரிய பைகளில் தாது மணல் உள்ளது.

இவற்றை வெளியே எடுத்துச் செல்ல முடியாத வகையில் அதி காரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பிற தனி யார் கிடங்குகளில் தாது மணல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தீவிர ஆய்வு

குடோன்களில் இருக்கும் தாது மணல் சட்டப்படியாக எடுக்கப் பட்டதுதானா? விதி மீறல் ஏதும் உள்ளதா? அரசு தடை விதிக்கும் போது எவ்வளவு தாது மணல் இருந்தது? தற்போது எவ்வளவு உள்ளது? தடைக்குப் பிந்தைய காலத்தில் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது? வெளி மாவட் டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து எவ்வளவு தாது மணல் வந்துள்ளது என்பன போன்ற அனைத்து விவரங்களையும் கணக் கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

3 மாவட்டக் குழு

இந்த விவகாரம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், மூன்று மாவட்ட அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழு இது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யும்.

தாது மணல் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 17.2.2017-ல் சென்னையில் ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற் கெனவே குழு நியமிக்கப்பட்டு தாது மணல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசு தடை விதிப்பு

தமிழகத்தில் தாது மணல் எடுக்க தமிழக அரசு கடந்த 8.8.2013-ல் தடை விதித்தது. எனவே, தாது மணல் எடுக்க எந்த வகையிலும் அனுமதி கிடையாது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்தாலும், அதற்கு போக்குவரத்து அனுமதிச் சீட்டு மாவட்ட ஆட்சி யரிடம் பெற வேண்டும். ஆனால், போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்குவதும் அரசால் தடை செய் யப்பட்டுள்ளது. எனவே, தாது மணலை எந்த வகையிலும் தூத்துக் குடி மாவட்டத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.

இதுதவிர தாது மணலில் கதிரியக்கம் கொண்ட கனிமங்கள் உள்ளன. எனவே, கதிரியக்கம் இல்லை என அணுசக்தி துறை இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும். இச்சூழ்நிலையில்தான், 420 மெட்ரிக் டன் தாது மணலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கனிமவளத் துறை உதவி இயக்குநர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை வழங்க அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

டிஆர்ஓ விசாரணை

இச்சான்றிதழின் உண்மை தன்மை குறித்து சுங்கத்துறை அதி காரிகள் அனுப்பிய கடிதமும் உதவி இயக்குநரின் கைகளுக்கு கிடைத்துள்ளது. இது தொடர் பாக மாவட்ட வருவாய் அலுவ லர் விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. காவல் துறையி லும் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in