Published : 16 Mar 2017 08:44 AM
Last Updated : 16 Mar 2017 08:44 AM

பணம் வாங்கியதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை: மின்வாரிய பொறியாளர் பணியிடத்துக்கு ஒளிவுமறைவின்றி நேர்காணல் - அமைச்சர் பி.தங்கமணி விளக்கம்

‘‘மின்வாரிய பொறியாளர் பணிக் கான நேர்காணல் ஒளிவு மறைவின்றி நடந்து வருகிறது. பணம் வாங்கியதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

மின்வாரிய பொறியாளர் பணி யிடங்களை நிரப்புவதற்கான நேர் காணல் தற்போது நடந்து வருகிறது. இந்த நேர்காணல் தனியார் விடுதி யில் நடத்தப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி யிருந்தார். இதை மறுத்துள்ள தமிழக எரிசக்தித்துறை அமைச்சர் பி.தங்க மணி நேற்று கூறியதாவது:

தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. அதற்கான எழுத்து தேர்வில் 95 ஆயிரம் பேர் பங்கேற்ற னர். அதன்பின் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை வைத்து திருத்தி மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு நேர்முகத் தேர்வு நடக்கிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடப்பதால், நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. வேறு இடத்தில் நடத்தினால், இருக்கை, சிற்றுண்டி வசதிகள் செய்ய முடியாது என்பதால், தனியார் விடுதியில் நடத்தப்படுகிறது. ஒளிவு மறைவின்றி நேர்காணல் நடக்கிறது.

யார் தகுதியானவர்களோ தகுதி யின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 375 உதவிப் பொறியாளர்களில், 300 எலெக்ட்ரிக் கல், 50 சிவில், 25 மெக்கானிக்கல் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாற் றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத அடிப்படையில் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் இல்லை.

மேலும், உதவிப் பொறியாளர் தேர்வின் போது ரூ.500 கட்டணம் பெறப்பட்டது. இதில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு திருத்தல் கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையையும் அவர்களுக்கே செலவழிக்கும் விதமாக தனி யார் விடுதியில் அவர்களுக்கு சிற்றுண்டி, தேநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

எவ்வித தவறும் இல்லை

நேர்காணலில் பங்கேற்றவர்களை சந்தித்து கேட்டால் உண்மை தெரியும். நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், காஞ்சிபுரம் மாவட் டத்தில் தனியார் விடுதியில் நடத்தப்படுகிறது. நேர்காணலை தனியார் விடுதியில் நடத்துவதில் எவ்வித தவறும் இல்லை. மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. கட் ஆப் மார்க் இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளதையும் வெளியிட்டுள்ளோம்.

ராமதாசை பொறுத்தவரை, அவர்களின் மறைமுக ஆதரவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது ஓராண்டு கழித்து நடக்கும் நேர்காணலை நிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இந்த நேர் காணலின்போது பணம் வாங்கியதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x