Published : 07 Jan 2014 09:52 AM
Last Updated : 07 Jan 2014 09:52 AM

நோயே வராமல் தடுக்கும் ஆய்வில் ஈடுபடுங்கள்: அப்துல் கலாம் வேண்டுகோள்

நோய்களை வராமல் தடுப்பதற் கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்தார்

புதிய மருத்துவ சேவை

தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவ சோதனை மையங்கள் கணினி மூலமாக அனுப்பும் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறிக்கைகளைப் பெற்று அதேவழியில் உடனடியாக மருத்துவ ஆலோசனை வழங்கும் (டெலி-ரேடியாலஜி) புதிய மருத்துவ சேவையை சென்னை அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடங்கிவைத் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை

தாராள குணம், நன்னடத்தை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, கூர்மையான கவனம், அறிவாற்றல் ஆகிய 6 பண்புகள் மருத்துவர் களுக்கும், நர்சுகளுக்கும் மிகவும் அவசியம். அவர்கள் துறைசார்ந்த அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நோயாளிகள் மீது கருணை உள்ள திற மையான மருத்துவர்தான் நல்ல மருத்துவர் என்று அழைக்கப் படுவார்.

ஒரு காலத்தில் தரமான மருத்துவ சிகிச்சைக்காக வெளி நாடுகளுக்குச் செல்வார்கள். இப்போது வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுச்செல்கிறார்கள். தரமான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் கிடைப்பதே இதற்குக் காரணம். ஆனால், அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவில்லை.

நோய் தடுப்பு ஆராய்ச்சி

குறைந்த கட்டணத்தில் அனைத்து மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண் டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் பற் றாக்குறை, சுத்தமான காற்று இன்மை போன்றவற்றால் பல் வேறு நோய்கள் உருவாகின்றன.

நோய்களை குணப்படுத்து வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறும் அதேவேளையில், நோய்கள் வராமல் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். என்றார் கலாம்.

என்னென்ன பயன்கள்?

முன்னதாக, அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் பிரீதா ரெட்டி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, மருத்துவ இயக்குநர் டாக்டர் பாமா நன்றி கூறினார். விழாவில், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், நர்சுகள், நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள டெலி-ரேடியாலஜி தொழில்நுட்பம் மூலம் தொலை தூரங்களில் உள்ள நோயாளிகள் அங்கிருந்தபடியே தங்கள் மருத்துவ சோதனை அறிக்கை குறித்து நிபுணர்களின் கருத் தையும், ஆலோசனையையும் வெகுவிரைவாக பெற முடியும். தேவையற்ற பயண அலைச்சல் மிச்சமாகும். மருத்துவச் செலவு குறைவும்.

மருத்துவ நிபுணரின் கருத்துக்காக ஒருநாள் அல்லது ஒரு வாரம் காத்திருக்கும் நிலை மாறி அரை மணி நேரத்தில் விரைவாக மருத்துவ அறிக்கை குறித்த ஆலோசனையை பெற்றுவிடலாம். இந்த சேவையை 24 மணி நேரமும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x