

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய செல்லும் முன்பு, ‘துரோகங்களை வென்று காட்டு வேன்’ என ஜெயலலிதா நினை விடத்தில் சசிகலா 3 முறை அடித்து சபதம் செய்தார்.
சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்ற வாளிகள் என உச்ச நீதிமன் றம் நேற்று முன்தினம் தீர்ப் பளித்தது. உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியாகும்போது சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால், சசிகலாவின் முதல்வ ராகும் கனவு தகர்ந்தது. மேலும், 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட் டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி, எடப்பாடி பழனி சாமியை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்து, கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினர். ஆளுநர் வித்யா சாகர் அழைப்பின் பேரில் பழனி சாமி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆளுநரிடம் எம்எல்ஏக் கள் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர். அதன்பின் ஆளு நரின் அழைப்புக்காக காத் திருந்தனர். சசிகலாவும் உடனடி யாக பெங்களூரு செல்ல வேண்டியிருந்ததால், கூவத் தூரில் இருந்து நேற்று முன் தினம் இரவு போயஸ் தோட்டத் துக்கு புறப்பட்டார். முன்னதாக, எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய அவர், ‘‘அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நீங்கள் ஒற் றுமையாக இருந்து, தமிழகத் தில் திமுக என்ற கட்சியே இல்லாமல் செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில், நேற்று அதி காலை 5.45 மணிக்கு விமானத் தில் சசிகலா, இளவரசி ஆகி யோர் பெங்களூரு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரணடைய அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்ததால், சசிகலா புறப்படுவது தாமதமானது. ஆனால், சசிகலா தரப்பு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை யடுத்து, பெங்களூரு செல்ல சசிகலா தயாரானார்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போயஸ் தோட்ட இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களில் சிலரை மட்டும் உள்ளே அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தொண் டர்களிடையே அவர் பேசிய தாவது:
யாரும் கவலைப்பட வேண் டாம். அதிமுக காலத்துக்கும் தமிழகத்தை ஆள வேண்டும். மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும். இந்த ஒரே எண்ணத் தில் நீங்கள் பயணிக்க வேண் டும் என்பதே என் ஆசை. எதை யும் தாங்கும் இதயம் வேண் டும் என்று அண்ணா கூறினார். எம்ஜிஆர் பாடல் வரிகள் நமக்கு தைரியத்தை தரும்.
ஜெயலலிதா சிங்கம்போல் இருந்தார். அவருடன் இருந்த எனக்கும் துணிவு உண்டு. அத னால் நான் பயப்படவில்லை. உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். நான் எங் கிருந்தாலும் கட்சிப் பணிகள் மற்றும் உங்களைப் பற்றி கேட் டுக் கொண்டுதான் இருப்பேன். நான் வெளியில் வரும்போது மீண்டும் அதிமுக ஆட்சியை தமி ழகத்தில் உண்டாக்குவோம். கவலைப்படாமல் நீங்கள் செயல்பட வேண்டும். சோத னையை வென்று காட்டுவோம். துணிச்சலுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் காலை 11.40 மணிக்கு சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட் டார். அவரது காரைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் மற்றும் விவேக் ஆகியோர் தனி வாகனத்தில் சென்றனர். மற் றொரு காரில் சசிகலாவின் உதவியாளர் இருந்தார். அந்தக் காரில் தேவையான உடைகள், பொருட்கள் ஆகியவை எடுத் துச் செல்லப்பட்டன.
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத் துக்கு சென்று வணங்கிய சசிகலா, 3 முறை நினைவிடத் தில் அடித்து சபதம் செய்தார். ‘துரோகத்தை வெல்வேன்’ என்று கூறி அவர் சபதம் செய்த தாக கூறப்படுகிறது. மெரினா வில் இருந்து புறப்பட்ட சசிகலா, பகல் 12.25 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென் றார். அங்கு 10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.