Published : 21 Jul 2016 08:55 AM
Last Updated : 21 Jul 2016 08:55 AM

கலாம் மணிமண்டபம் கட்ட கூடுதல் இடம்: நில உரிமையாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்காகக் கூடுதல் நிலத்தை கையப்படுத்த நில உரிமையாளர்களிடம் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில் லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டு இருந்த போது காலமானார். அவரது உடல் அவர் பிறந்த ஊரான ராமேசுவரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது. கலாமின் நினைவைப் போற்றும் வகையில் பேக்கரும்பு நினைவிடத்திலேயே, அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணி மண்டபம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நினைவிடம் பராமரிப்பு மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

கலாமின் முதலாமாண்டு நினைவு நாளான ஜூலை 27-ம் தேதி அவரது நினைவிடத்தில் மணி மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தமிழக வருவாய்த் துறையினர் பேக்கரும்பு கலாம் நினைவிடம் அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்காக சர்வே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேக்கரும்பில் கலாம் நினைவிடத் தில் மணிமண்டபம் கட்டுவதற்காகக் கூடுதல் நிலத்தை கையப்படுத்த தமிழக வருவாய்த் துறை செய லாளர் பி.சந்திரமோகன், ராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமையில் அரசு அதிகாரி கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கலாம் நினைவிடத்தில் மணி மண்டபம், அறிவுசார் மையம், நூலகம், அருங்காட்சியகம், அரங்கம், பூங்கா, வாகனம் நிறுத்து மிடம், அலுவலகம் ஆகியவற்றை அமைக்க தமிழக அரசு ஒதுக்கித் தந்த நிலம் போதாது. எனவே கூடுதலாக 6 முதல் 7 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என மத்திய பொதுப்பணித் துறை அதி காரிகள் தமிழக அரசிடம் கோரினர். இதனைத் தொடர்ந்து தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாக பேக்கரும்பு கலாம் நினைவிடத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களை சர்வே செய்து அறிக்கை அளித்துள்ளோம்.

தற்போது 2 ஏக்கர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கலாம் நினைவிடம் அருகேயே கலாமின் உறவினர்கள் சிலர் சங்கு கம்பெனி வைப்பதற்காக நிலங் களை வாங்கி வைத்துள்ளனர். அவர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததும் மத்திய அரசு கோரிய முழுமையான இடமும் கையகப்படுத்தப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x