Published : 14 Jun 2017 07:58 AM
Last Updated : 14 Jun 2017 07:58 AM

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா: 21 முதல் 28 வரை வெவ்வேறு நாட்களில் நடக்கிறது

அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்கள் வரும் 21 முதல் 28-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளன.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளி யிட்டுள்ள அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல கல்லூரி பட்டமளிப்பு விழா ஜூன் 21-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கோவையிலும், திண்டிவனம், விழுப்புரம், ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விழுப்புரத்திலும், பண்ருட்டி, பிஐடி வளாகம், அரியலூர், பட்டுக்கோட்டை, திருக்குவளை உறுப்பு பொறியியல் கல்லூரி களின் பட்டமளிப்பு விழா 23-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருச்சி யிலும் நடைபெறும்.

மேலும் மதுரை மண்டல கல்லூரி, ராமநாதபுரம், திண்டுக்கல் உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா 24-ம் தேதி காலை 11 மணிக்கு திண்டுக்கல்லிலும், திருநெல்வேலி மண்டலக் கல்லூரி, தூத்துக்குடி, நாகர்கோவில் உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா 28-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடியிலும் நடைபெற உள்ளன. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள விரும்பும் மாண வர்கள் 16-ம் தேதிக்குள் பெயரை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x