மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்: புதிய டிஜிபி அசோக்குமார் பேட்டி

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்: புதிய டிஜிபி அசோக்குமார் பேட்டி
Updated on
1 min read

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கி யத்துவம் கொடுப்போம் என்று புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக டிஜிபியாக இருந்த ராமானுஜம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக அசோக்குமார் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று காலை 6.30 மணிக்கே மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வந்து கோப்புகளில் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் டிஜிபி அசோக்குமார் கூறியதாவது:

இந்தியாவிலேயே தலைசிறந்த காவல் துறையாக திகழும் தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பை ஏற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும். மற்ற போலீஸாரும் எப்போதுமே மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்து வம் கொடுக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் மனித நேயத் தோடும், அர்ப்பணிப்பு உணர்வுட னும் போலீஸார் பணிபுரிய வேண்டும்.

தமிழக அரசு போலீசாருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. இதுபோன்ற பல பயன்கள் போலீஸாருக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு உறு துணையாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in